ஓரெழுத்து ஒரு மொழி
ஓரெழுத்து ஒரு மொழிக்கு சில எடுத்துக்காட்டு
அ - அந்த, சுக்கு, திப்பிலி,எட்டு
ஆ -பசு, ஆச்சாமரம், சிவஞானம், இச்சை
இ -சுட்டு (அங்கே, அவன்), இந்த, அன்பு, ஆச்சரியம்
ஈ -அம்பு, குகை,இலட்சுமி, கடவுள், தா, ஈ, தேனீ, வண்டு, பாம்பு
உ - சிவன், பிரமன், சிவசக்தி, இரண்டு
ஊ -உணவு, இறைச்சி, சிவன், உண்ணல்
எ - எந்த, ஏழு எண்ணும் எண்ணின் குறி
ஏ - அம்பு, விளி, இடைச்சொல், எதிர்மறைப்பொருள், சிவன், திருமால்
ஐ - அழகு, அரசன், தலைவன், கடவுள், குரு, சிவன், தும்பை, பருந்து, வியப்பு
ஒ -நிகர், பொருந்து
ஓ -வினா, வியப்பு, ஆபத்து, ஒழிவு
ஒள - பூமி, ஆனந்தம், கடித்தல்
க - ஒன்று, அரசன், ஆன்மா, உடல், காற்று, பிரமன்
கா -சோலை, காவடி, காவல், தொலை
கீ - கிளிக்குரல்
கு - குற்றம், சிறுமை
கூ - கூகை, பூமி, கூவு, அழுக்கு, பிசாசு
கை - இடம், பகை, கரம், ஒழுக்கம், கரம், துதிக்கை, வரிசை, ஒப்பனை, அளவு, கைமரம்
கோ - அரசன், அம்பு, சூரியன், சந்திரன், நீர், சொர்க்கம், ஆண்மகன், பூமி, ஆகாயம், பசு, மலை
கௌ - மனத்தாங்கல், தீங்கு, கொள்ளு, பற்றுதல்
ச சக
சா மரணம், இறப்பு, போ, பேய், கெடுதல்
சீ -அலட்சியம்,அடக்கம், இகழ்ச்சி, புண்சீழ்,பார்வதி, இலட்சுமி, கலைமகள், சிதல்
சு சுய, சுகம்
சே - எருது, மரம், தூரம், உயர்வு, சிவப்பு
சை இகழ்ச்சி, செல்வம்
சோ -அரண், நகரம், ஒலி, உமை
சௌ - சௌபாக்கியவதி (சுமங்கலி) என்பதன் சுருக்கம்
ஞா - சுட்டு, பொருந்து
ஞை -இகழ்ச்சி
த - பிரம்மா, குபேரன்
தா - வருத்தம், பகை, வலிமை, கெடுதி, கொடு,குற்றம், தாண்டுதல்
தீ-நெருப்பு, அறிவு, நரகம், கொடுமை, கோபம், இனிமை
து - கெடு, வருத்து, பிரிவு
தூ-தூய்மை, பகை, தடை, வலிமை, சிறகு, வெண்மை
தே - தெய்வம், நாயகன், கருணை, அருள்
தை - தைத்திங்கள், அலங்கரி, தையல், மகரராசி, தாளம்
நா - நாக்கு,திறப்பு, அயலார்
நி -உறுதி, அருகில், விருப்பம், நிச்சயம், இன்மை
நீ - முன்னிலைப் பெயர், தீங்கு, விடு
நு - தோணி, தியானம், ஆயுதம்
நூ எள், யானை, ஆபரணம்
நே - அன்பு, நேயம், ஈரம்
நை வாடு, இரங்கு, தளர்தல், வருந்து
நொ - துக்கம், இல்லை, நோய், வலி, பலமின்மை
நௌ - மரக்கலம்
ப - காற்று, இரு பதில் ஒன்று, பின்னம், காற்று, சாபம், குடித்தல்
LIIT பாட்டு, நிழல், அழகு, பாடல், நூல், பரப்பு
பி -அழகு
. பீ - அச்சம்,மலம், தொண்டி
.
பூ மலர், இடம், அழகு, பொலிவு, கூர்மை, பூமி, இலை
பே நுரை, மேகம், இல்லை
பை பசுமை, பாம்பின் படம், சாக்கு, அழகு, குடற்பை, நிறம்
போ - போதல், செல்
ம - காலம், சந்திரன், எமன், பிரமன், விஷ்ணு, சிவன், அசோக மரம்
மா - மாமரம், வலி, விண்டு, வயல், பெரிய, அழகு, அன்னை, கருமை, அழைப்பு, இலட்சுமி, குதிரை, விலங்கு
மீ -பெருமை, மேல்புறம், உயர்வு மேலே, வானம்
மூ - மூன்று, மூப்பு
மே - அன்பு, மேம்பாடு, மேன்மை
மை - குற்றம், மலடி, மேகம், நீர், கருமை, அஞ்சனம், ஆடு
யா ஐயம், இல்லை, யாவை, ஒரு மரம், வினா
. வா வருக
வி - உறுதி, அறிவு, பிரிவு
வீ - பூ, பறவை, நீக்கம் சாவு
வே வேவு, உளவு, ஒற்று
வை கீழே வைத்தல், வைக்கோல், கூர்மை
வௌ - திருடுதல், கொள்ளையிடல், பிடித்தல்
Comments
Post a Comment